♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

செவ்வாய், 18 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டு வாழ்த்துக்கள்

                   அனைவருக்கும் இனிய புத்தாண்டு
                                      நல்வாழ்த்துக்கள்!!!


"God gives you...
12 months of Happiness,
52 Weeks of fun,
365 Days of Success,
52600 Minutes of Good luck,
3153600 Seconds of joy... and that's all ! '
  HAPPY NEW YEAR 2012  








































திங்கள், 10 டிசம்பர், 2012

திருமண வாழ்த்து


பொன்னான தருணம்...!!




நித்தமொரு நெடுந்தவம் புரிந்திட்டாள் போலும்.. 
நித்தியசெல்வன் உந்தன் நெஞ்சை பறித்திடவே!
நீ வண்டென சுற்றிய வாசனை மலர் இவள்..
ஒற்றைப் பார்வையிலே, ஓராயிரம் மடல்தொடுத்தே..
ஒருநொடியில் மனதைபறித்த கள்ளி இவள்!
இவள் சந்தன சிரிப்பொலியின் - சில
சந்தங்கள் போதுமே உம் காதல்
வாழுமே! பல காலங்கள் நின்று!
உணர்வுகளின் சங்கமத்தில், நினைவுகளால்
கனவுகள் கோர்த்தே - வாழுங்கள்
இரவை நீங்க நிலவைப்போல நினைவில் 
நிறைத்திட்ட உறவாய் என்றென்றும்..!! 

திருமண வாழ்த்து !!




வளரும் காவியமாய் உம் வாழ்க்கை..
தொடங்கிடவே வள்ளுவன் வந்து 
பாடிடட்டும் வாழ்த்துப்பா! - கனவில்தினம் 
கரைந்துபோன உம்காதல் கதைபேசிடவே
கம்பன் இல்லையே இங்கு! 
உம் ஒற்றைக்காதல் போதுமே - வரும்
காவியம்யாவிலும் பேசிடவே!
திரை கடல் இணைத்தே - தினம்
இரவை விழுங்கிட்ட உம் காதல்
கதையை கேட்டிடவே.. வெட்கச்சிவப்பில்
மெல்லமாய் கண்விழிக்கிறான் கதிரவனும்!
மந்திரங்கள் முழங்கிட.. மங்கள நாண்சூடியே
பொதிகை மலைசூடும் வான்முகில் போல..
எதுகையென இருங்கள் இருவரும்!
நெடிய சொந்தங்கள் நெஞ்சார வாழ்த்திடவே..
முக்கோடி தேவர்களும்.. முதல் நின்று வாழ்த்திடட்டும்!
என மலர்க்கோடி தூவி நின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்.....!!

\



இடம் மாறிய இதயத்தோடு தினம் 
கனவில் கதை பேசியும்...
பழகிய பாதையிலும் பாதைதவறி, 

பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் 
கவிதை பருகியதும் போதும் - இதோ 
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு 
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், 
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் 
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் 
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!



சுந்தர சோலைதனில், சந்தன சாதிமுல்லையென..
சுபம் ஆயிரம் சூடிடவந்த 'சுப்புலட்சுமியே'..
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!





மாக்கோலம் பூந்தோரணம், குலை வாழையோடு, 
தினம் திகட்டா தேன்மதுர தீஞ்சுவை செந்தேனாய்..
வான்பொதிகை வண்ணமயில் எண்ணம் கொண்டு 
சம்மத மௌனங்கள் சாட்சியாய்...


மாதவப்புதல்வி, மங்கையற்கரசி 'செந்தமிழ்செல்வியை' 
மஞ்சள் கயிறோடு,ஊன்  உயிர் உறைசெரும்
மறவாத மாணிக்கமாய் மனிதருள் உறவாடிய 
சிவசுப்ரமணிய புதல்வா 'ரமேசு' - நீ 
வாழ்க பல்லாண்டு...! என வள்ளுவன் குறள் வாழ்த்த 
நறுமணமாய் நாளும் மலருங்கள் தமிழாக!
இதிகாச இலக்கணங்கள் வாழ்க்கை தத்துவம்
எடுத்துரைக்க.. எழுதுங்கள் இல்லற வாழ்வை,
'வள்ளுவன்-வாசுகியாக' வாழ்ந்தார்கள் என...!! 

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்..!!

Posted by Yellem Lm On Wednesday, September 07, 2011 No comments

கவிதை பேசும் விழிகள் இனி,
காதல் மொழி பேசட்டுமே..!! 
காப்பியம் ஆயிரம் கண்டிரா,
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!

காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்,
வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்திட - இனி
சொந்தமே இவனென மந்திர மாலைசூடு..!
முன்னின்று வாழ்த்திடும் முத்தமிழ் வேதங்களோடு,
உன்தோள் நின்று துணையாய் எப்போதும் நாங்கள்..!!

மணநாள் காணும் திருநாள் ..!!



பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,
புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,

உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!! 

பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!

இனிதே ஆரம்பம் இன்னோர் காவியம்..!!





மழைக்கால மலர்க்கூட்டமாய்,
மாந்தளிர் தழுவும் வெண்பனி மூட்டமாய்,
கோவைக்கனி சுமக்கும் கோடிப்புன்னகையாய்,
பொன்மஞ்சள் கயிறோடு உயிரில் சுமந்திடு..
வான்முகில் தேடும் வானவில் 'சுந்தர வள்ளியே' - எம்
காவியம் காணா ஓவியம் 'சக்திவடிவேலை' ..!

செந்தமிழின் சுவையாய், செங்கரும்புச்சாறாய்,
செங்கமல மலராய் சங்கமிக்கும் சந்தன மலர்களே..
மங்களம் பொங்கவரும் உம் இல்லறம் சிறக்க..
முக்கோடி தேவர்களும் தப்பாது வாழ்த்தி நிற்க..!
மலர்க்கோடி தூவிநின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்..!!


இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் !




இதோ...
காலமெல்லாம் காதல் மொழி பேச
இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் !

தென்றல் தேடும் தேனிலவுதனை தனக்கேயென தனக்குள் மறைக்கும் வான்முகில் தனைப்போல,
வண்ணமயில் இவளை உனக்குள்ளே ஒளித்துகொள் !

நானிலம் போற்றும் உம் நல்வாழ்வு கண்டு..
நற்றமிழ் புலவர்கள் இன்னுமோர் காப்பியம் இயற்றட்டும் இக்கணம் !
இவ்விணைபோல் இல்லையென கூறட்டும் புது இலக்கணம் !






இன்றே காதல் கொண்டு வண்ணமாக்கிடுங்கள் 
பாசப் புள்ளியில்
நேசக் கோடிட்ட
புது வாழ்க்கை கோலத்தை...!!

வண்ண பூக்களின் வாசனையோடு
வண்ணத்து பூச்சியின் யோசனையோடு
வான்முகில் தோரண வழியில்...
...
தொடரும் இந்த இனிய பயணம்
இருவர் பயணம் ஆயினும்
இட்டு செல்லுங்கள் 
ஒருவர் காலடியை மட்டும்...!!