♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்
மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்
மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி
ல் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள
நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே

சத்தியமாய்ப் புதியன


பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே

அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்

இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்

உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம்- நட்புகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி

வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்

புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்

வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்

மாந்தர்களும் வாழ்த்துவர்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.! 
ccccccccccccccccccccccccccccccccccccccccccccc
கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)

அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

எளிமைக்கு வழிவிடுங்கள்!

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

ஐயங்களை அழித்திங்கள்!

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!



 
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்


ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.


ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும்

நிலவன்


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…


எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்
உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து
கண்மணிகள் கதைசொல்லும்!

முத்தான காதல் செய்த
மணமக்கள்  ஓருயிராய்
வாழ்க பல்லாண்டு
bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb



14 கருத்துகள்:

  1. மணமகன் :சுரேந்தர்
    மணமகள்:காயத்ரி (எ) நிஷா
    மணநாள்:ஏப்ரல் 9
    மணஇடம்:சரோ இரத்தின மஹால்,பெண்ணாடம்
    வாழ்த்தும் அன்பு உள்ளம் :குழுமூர் வெங்கடேசன்
    971559769903.வாழ்த்து கவிதை வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. மணமகன் :சுரேந்தர்
    மணமகள்:காயத்ரி (எ) நிஷா
    மணநாள்:ஏப்ரல் 9
    மணஇடம்:சரோ இரத்தின மஹால்,பெண்ணாடம்
    வாழ்த்தும் அன்பு உள்ளம் :குழுமூர் வெங்கடேசன்
    971559769903.வாழ்த்து கவிதை வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. மணமகன் :சுரேந்தர்
    மணமகள்:காயத்ரி (எ) நிஷா
    மணநாள்:ஏப்ரல் 9
    மணஇடம்:சரோ இரத்தின மஹால்,பெண்ணாடம்
    வாழ்த்தும் அன்பு உள்ளம் :குழுமூர் வெங்கடேசன்
    971559769903.வாழ்த்து கவிதை வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. இருமண வாழ்த்து மடல்

    இறைவனின் ஆசியோடு  உங்கள்
    மண வாழ்க்கையை வாழ்த்துரைக்க!
    ஆயிரமாயிரம் புன்னகை பூக்களாய்
    மங்களத்  திருமகளாம் ஜினிதா
    மணவறையில் காத்திருக்க!திருமகனின்
    வரவிற்காய் எதிர்நோக்கும் நன்னாளில்!

    மேளதாளத்துடன்  உற்றார்
    உறவினர் மற்றும் நன்பர்கள் படை சூழ!
    இறைவனின்  வாழ்த்துக்களோடு
    அன்பின் திருமகனாம் ஜெய சேகர்
    ஆரவாரத்துடன் வருகைசூழ!இருமனமும் ஒருமனமாய் மாறியதே இன்னாளில்!

    ஆகா!எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
    கொட்டும் மழையும் பூவாய் பொழியவே!
    அத்தனை மக்களும் அன்போடு வாழ்த்த
    உங்கள் மண வாழ்க்கை இன்பமாய் வாழ!
    இறைவனின் துணையோடு!அன்பாய் வாழ்த்துகிறோம் நாங்கள் எல்லோருமே!

    இருமனத்தின் எண்ணங்கள் ஒருமனமாய் இன்றுபோல் திகட்டாது தொடர்ந்து வாழவே! ஓருயிராய் ஆருயிராய் பண்போடு என்றும் மணமக்கள் போல் அன்போடு வாழவே!
    இல்லறத்தின் இலக்கணமாய் இருமனமும் ஒருமனமாய் என்றென்றும் வாழவே!

    அன்பும் பண்பும் பாசத்தொடும் என்றென்றும்
    ஆன்றோர் சான்றோர் போற்றும்படி வாழவே!
    குழந்தைகள் செல்வத்தோடு பல்லாண்டு வாழ கிட்டா புகழும் எட்டா சிறப்பும் பெற்று வாழவே! இறைவனின் வழித்துணையோடு வாழ
    பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.....

    தேதி : 28 - 12 -2012
    இடம் : பிலாவிளை, கருங்கல்.


    இவன்
    உற்றார், உறவினர், நண்பர்கள்.

    பதிலளிநீக்கு
  5. எத்தனை இன்பம்
    இந்த நிமிடத்திலே!
    கொட்டும் மழையும்
    பூவாய் பொழிய
    அத்தனை தேவர்களும்
    ஒருங்கே வாழ்த்த
    உங்கள் திருமண வாழ்க்கை
    மகிழ்வாய் அமைய
    வாழ்த்துகிறோம்!

    பதிலளிநீக்கு
  6. பெண் பார்த்து
    ஆண் பார்த்து
    பெரியோர்கள் பார்த்து
    நாள் பார்த்து
    உறவுகள் கூடும் திருமணம்
    மண கோர்த்து அன்பினின் பரிமாற்றம்
    செய்யும் காலம் வாழ்த்தும்

    பதிலளிநீக்கு