♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வியாழன், 25 அக்டோபர், 2012

ஈத் முபாரக்!


ஈத் முபாரக்!




Eid ul-fitr scraps, greetings & graphics



அஸ்ஸலாமு அலைக்கும்! உலகின் பல‌ பகுதிகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!

பெருநாள் நல்வாழ்த்துக்கள்


பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ம்மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் மகிழ்ச்சியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வளைகுடாவாழ் கோட்டாற்று வாசிகள் [ K E F - G ] அமைப்பின் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....



உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்…


ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்…


இறையருள் நிறைந்திங்கு – பாவக்
கறைகளும் மறையட்டும்
குறையிலா வளங்கள் சேர்ந்து – மனக்
குகை இருள் நீங்கட்டும்
வரைமுறை எல்லைதாண்டி – உறவு
திரை கடல் தாண்டட்டும்
கரைந்திட்ட காலமெல்லாம் – இனி
கனவைப் போல மறையட்டும்
கவலைகள் ஒழியட்டும்
கல்புகள் விரியட்டும்
கருணை தருவில் இனி
கனிவு மலர் மலரட்டும்…
அப்துல்லாஹ்
பகிர்ந்து கொள்க

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! (2011)




இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே... ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் என் உறவுகள் அத்தனை பேருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக!

இதுவரையிலும் ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கும் :( என்னைப் போன்ற அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் இந்த தியாகத் திருநாளிலே வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!

புதன், 24 அக்டோபர், 2012

புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...


புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்பார்ந்த என் இனிய நட்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

--ஆசியா உமர்...

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்க‌ள் (2012)




எங்குமுள்ள இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
        இந்த பெருநாளிலே வாக்குறுதி கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
         மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்கு பெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கி வரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
         மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
         பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனிச் சிரம் வணங்கிப் போற்றும்
உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறேன்!