♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கல்யாண] வாழ்த்து கவிதை 20/2/2013


கல்யாண] வாழ்த்து கவிதை

மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி

வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்

புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்

வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்

மாந்தர்களும் வாழ்த்துவர்


நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!

வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!


 கையோடு கை சேர்த்து 
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்

சொர்க்கம் மண்ணில் கொண்டு
சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்
போற்றும் வண்ணம் வாழ்க!
இங்கிருந்து கொண்டே
வாழ்த்துகின்றேன் வாழ்க!

மணமகளும் மணமகனும் என்றும்..
இணைந்தே வாழ்க! இல்லறத்தை
இ(ணைந்)னிதே வெல்க!!!

கண்களாலே காதல் பேசி

வார்த்தையாலே வர்ணம் பூசி

பாசம் என்னும் கவிதையெழுதி......

நேசத்தோடு வாழனும் நண்பா .....


வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே வானம்

வாழும் வரை வாழ்கவே


எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா

வானம் போல வாழனும் நண்பா

நீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர

இன்பம் வந்து உங்களை சூழ...

வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்


அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட

இவர்களின்

இல்லறப் பாதையெங்கும்

உங்களின் வாழ்த்துக்களால்

தோரணம் கட்டிட

விரும்பி அழைக்கிறோம்!

இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…


அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்


ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.


ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும் 


உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)

அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

எளிமைக்கு வழிவிடுங்கள்!

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

ஐயங்களை அழித்திங்கள்!

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!



kavithaivalthukal. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக