2013 - என்ன வேண்டும் எனக்கும் உங்களுக்கும்
வேண்டும் வேண்டும்
இந்திய மக்களை வாட்டி
வதைக்காத ஒரு அரசு
எனக்கு வேண்டும்.
உழைப்பிற்கேற்ற
ஊதியத்தை வழங்குகின்ற
முதலாளிகள் வேண்டும்.
இந்தியரின் நலனுக்காய்
ஆட்சி செய்யும்
இந்திய அரசு
இப்போதே வேண்டும்.
பெண்களை தெய்வமாக
போற்றாவிட்டாலும்
சக மனுஷியாகக் கருதும்
உள்ளம் கொண்டவர்கள்
பெருக வேண்டும்.
கொலை, கொள்ளை,
பாலியல் கொடுமை
எதுவும் இல்லாத
செய்திகளோடு
ஒவ்வொரு நாளும்
செய்தித்தாள்கள்
வர வேண்டும்.
மின்வெட்டு இல்லாத
தமிழகம்
என்றும் வேண்டும்.
கனவுகளாய்,
கானல் நீராய் மாறாமல்
இருக்க
செங்கொடியின் ஆட்சி
இங்கே வர வேண்டும்.
உழைப்பாளி மக்களின்
கைகளில்
ஆட்சி மலர்ந்திட
மக்கள் மனதிலே
நல்லதொரு
மாற்றம் வேண்டும்.
இது அனைத்தையும்
செய்கின்ற
2013 தான்
எனக்கு வேண்டும்,
உங்களுக்கும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக