வியாழன், 15 மார்ச், 2012
ரூ. 6 லட்சம் பறிமுதல்: இளைஞர் கைது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் ஜாபிர்ஹசன் (38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் கடை நடத்தியுள்ளார். கடையில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து சாதிக் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களது பணத்தை அரசுக்கு வரி கட்டாமல் கொண்டுவரும் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் சாதிக் உள்ளிட்டோர் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதில் சேர்ந்த ஜாபிர்ஹசன் அடிக்கடி பணத்துடன் மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வந்து அதை உரியவர்களிடம் ஒப்படைத்து கமிஷன் பெற்றுச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சிக்கு வந்த ஜாபிர்ஹசன் அங்கு அழகுசாதனப் பொருள்கள் விற்கும் ராகேஷ் என்பவரிடம் ரூ. 6 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ரயில் மூலம் மதுரை வந்துள்ளார். மதுரை மேலவெளிவீதிப் பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஜாபிர்ஹசனிடம் விசாரணை நடத்தி அவரிடமிருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக