வியாழன், 15 மார்ச், 2012
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்பானவர்களிடம் விசாரிக்கவேண்டும்! சனல்4 காணொளியில் வலியுறுத்தல்! இவ் விடயம் 16. 03. 2012, (வெள்ளி), தமிழீழ நேரம் 7:33க்கு பதிவு செய்யப்பட்டது தாயக, இலங்கைச் செய்திகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளி ஆதாரங்களுடன் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குறித்த ஆவணப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனை இராணுவம் சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்களை சனல் 4 விரிவாக விளக்கியுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததாக சொல்லப்படுவதற்கான ஆதாரங்களை முழுமையாக வெளியிடப்படவில்லை. மேலும் இலங்கையின் தமிழர்கள் பகுதியில் வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு வழங்கக் கூடாது என்று மருத்துவர்களை எச்சரித்தது. அதிபயரங்கரமான ஆயுதங்களை உபயோகப்படுத்தி மக்களை கொன்றமை உட்பட அடுக்கடுக்காக பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்களை இந்த ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி இதற்கு முன்னர் வெளியிட்ட போர்க்குற்ற காணொளிகளை பொய் எனக்கூறிய இலங்கை தற்போது வெளியாகியுள்ள புதிய ஆவணப்படத்தையும் நிராகரித்துள்ளது. ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் குறித்த ஆவணப்படம் திரையிடப்படவில்லை எனவும் வெளி இடமொன்றில் ஆவணப்படம் திரையிடப்பட்டதாகவும் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் குறிப்பிட்டார். சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத போர் குற்றங்கள் காணொளியின் ஊடாக போர்க்குற்றச்சாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியிடப்பட்ட ஒன்று என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெவித்துள்ளார். குறித்த காணொளி மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என அவர் கூறினார். இதற்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் சரத் பொன்சேகா குறித்து கூறப்பட்டதாகவும் இம்றை காணொளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் சனல் 4 இன் அரசியல் நோக்கம் தெளிவாவதாகவும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக