♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 2 மே, 2012

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்





நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

இந்தக் குடும்ப வாழ்க்கை நம்மை கணவன் அல்லது மனைவி என்ற முறையில் கடைசிவரை கூட்டிச் செல்லும். எத்தனை இன்னல்கள், மனக் கசப்புகள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த எதிர் காலத்தைத் தரும்.

இவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையில் எவ்வகையில் பிரச்சினைகள் வரலாம் என்பதில் எந்த முன் அனுபவமும் இல்லாத எனது கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதில் முன் அனுபவம் உள்ள வாசகர்கள் இருப்பின், தவறுகளை அல்லது மேலும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.
1) சந்தேகம்
தனிப்பட்ட ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியுமான சில விடயங்களும் சொல்ல முடியாத சில விடயங்களும் இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிலர் இதில் திறந்த புத்தகம். எல்லா விடயங்களையும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவார்கள். இவற்றில் இரு பாலாருக்கும் சந்தேகம் எவ்வாறு வரும் என்பது மிகவும் தொலைவில் உள்ள சிந்திக்கவே முடியாத ஒரு விடயம் அல்ல.
பொதுவாக இரு பாலாரும் எதிர் பாலாருடன் சகஜமாகப் பழகுவது இதற்குப் பெரிதும் வழி வகுக்கும். இதைக் குறைத்துக் கொண்டாலே இலகுவில் சந்தேகம் எனும் பிரச்சினையைத் தூக்கி எறிந்துவிட முடியும். அதிலும் முக்கியமாக, ஒருவர் மற்றவருக்கு “நீ இவ்வாறு அந்த நபருடன் பழகுவது எனக்குப் பிடிக்கவில்ல” என்று சொல்லத் தயக்கமாக இருக்கும்.
இதை மனதிலேயே பூட்டி வைத்து உள்ளுக்குள் நொந்துகொண்டு இருப்பார்கள். இது மேலும் தொடரும்போது, ஒருவர் மற்றவர்மீது வெகுவாக எரிந்து விழுவது போன்று, ஒரு வெறுப்பைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.
இந்த சமயத்தில் வேறு ஏதாவது தொடர்பற்ற விடயத்தில் சிறு பிரச்சினை வந்தால் கூட, அதை மையமாக வைத்து, இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிது படுத்தி விடுவார்கள். இத்துணைக்கும் அந்த நபரின் மனதில் கூட அவ்வாறு ஒரு எண்ணம் இருந்திரக்காமல் இருக்கலாம். இது போன்று பிரிந்த எத்தனை குடும்பங்களை வாழ்க்கையில் கண்டுள்ளோம்!
பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.
அதிலும், எதைச் சொல்வாதாயினும் நீங்கள் உங்களது கணவனை அல்லது மனைவியைப் புரிந்துகொண்ட முறையில் அவர்களுக்குப் பொருந்தும் வகையில் அழகாகச் சொல்வது இன்னுமோர் முக்கய விடயம். உதாரணமாக, உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், கல்லாக இருந்தாலும் உங்களைப் புரிந்து கொள்ளும்.
2) தாம்பத்திய உறவில் திருப்தி
எந்த அளவுக்குத்தான் ஒருவரைக் காதலிக்கிறோம் என்று கூறினாலும், நாம் நமது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் கொண்டுள்ள அன்பிலிருந்து கணவன் அல்லது மனைவி மீது கொண்டுள்ள அன்பு குறிப்பிட்ட அளவு காமமும் கலந்த அன்பாகும். இல்லை என்று யாராலும் சொல்லவே முடியாது. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பற்றதாகும். இதில் எந்த வகையில் பிரச்சினைகள் வரலாம்?
இதுபற்றி விரிவாகப் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன். பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.
அத்தோடு அதற்குப் பல்வேறு உத்திகளும், உளவியல் மற்றும் வேறு உடலியல் யுத்திகளும் இருப்பதையும் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான முறையில் திருப்தி காணாத எல்லோரும் இன்னொருவரை நாடிப் போவது என்று சொல்லுவதைவிட எத்தனை பேர் உள்ளுக்குள் தமது உணர்வுகளைப் பூட்டி வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதுவே சில சமயங்களில் மற்றவர் மீது வெறுப்பு உண்டாகவும் காரணமாக அமையலாம்.
3) அன்பும் அரவணைப்பும்
ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.
பொதுவாகப் பிள்ளைகள் என்று ஆனவுடன் மனைவியின் அன்பு பிள்ளைகளுக்கும் செல்வதோடு, வீட்டு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, கணவன் மீது அன்பு காட்டுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது. அதேபோன்று, வேலைத்தளத்தில் வேலைப் பழு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவனுக்கும் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது.
கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை நமது பிரச்சினை போன்று பார்ப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.
அது ஒருபுறம் இருக்க, பொதுவாக நாங்கள் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது, எங்களிடம் உள்ள அனைத்து இரகசியங்களையும் மற்ற நபர் அறிந்து கொள்வது வழக்கம். எப்பொழுதுமே ஒருவர் ஒரு புரியாத புதிராக இருக்கும் பொழுது, அனைவரும் அவருடன் பழக வேண்டும், அவர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொள்வர்.
ஒருவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு, அவரிடம் பேசுவதற்குக் கூட எதுவும் இருக்காது. அத்தோடு, எந்த நபரைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்ட பிறகு அனைவரும், அந்த நபரை இடை போட்டு விடுவார்கள். அதற்குப் பின்னர் அந்த உறவில் சந்தோசம் குறைவாகவே இருக்கும். இதுவே திருமண வாழ்விலும் எமக்குப் பிரச்சினையாக அமையலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. எனினும், மற்றைய நபரின் தன்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது எங்களது கையில்தான் உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்று சொல்ல முடியாது. பின்வரும் சில பழக்க வழக்கங்களைக் கடைப் பிடித்து வந்தால் அவற்றை அடியோடு இல்லாமல் செய்வது என்பதைவிட அவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.
- வாரத்திற்கு ஒரு நாலாவது இருவரும் ஒன்றாய் உண்ணுவது.
- மாதத்திற்கு ஒருமுறையாவது வெளியே சென்று தனிமையில் மனதுவிட்டுப் பேசுவது.
- ஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய முயலாமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது.
- எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருத்தல்.
- ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, நல்ல புரிந்துணர்வுடன் இருத்தல்.
இதுபோன்ற பல வழிமுறைகள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் மேலே குறிப்பிட்டதை விடவும் மேலதிகமான பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சொல்லி அவற்றுக்கான தீர்வையும் சொல்லவே ஒரு ப்ளாக் திறக்கலாம். எனது மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
இது எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான பிரச்சினையைக் கடைசியாகச் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். அதுதான் குழந்தை பிறந்த பிறகு அந்தக் குழந்தை இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அழுவதால் வரும் பிரச்சினை. இது பல தம்பதியினரின் உறக்கத்தைப் பறிக்கும் ஒரு மெகா பிரச்சினை. இதற்கு மிக எளிதான ஒரு சூப்பர் ஐடியா கிடைக்கப் பெற்றது. அதையும் பாருங்கள்


…www.puthiyaulakam.com thanks

கொடி கட்டி பறக்கும் நத்தை மசாஜ்! (படங்கள் இணைப்பு)



சீனா, ஜப்பானை தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாசாரம் கொடி கட்டி பறக்க துவங்கி விட்டது. மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இந்த நாடுகளுக்குஇடையே, தற்போது கடும் போட்டி.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியி ருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர்.


ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், இதற்கென்ற பிரத்யேகமான, “நத்தை மசாஜ் கிளப்’ உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.

“இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது…’ என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.


www.puthiyaulakam.com  thanks

மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்)



உடனே சமைக்கப்பட்ட பச்சை உணவுகளை உண்ணும் பழக்கம் ஐரோப்பிய அமெரிக்க கிழக்காசிய நாடுகளைச்சேர்ந்தவர்களிடையே இருந்துவருகின்றது. அதாவது உதாரணமாக,உயிருடன் உள்ள மீனை அப்படியே பிடித்து செதில் உரித்துவிட்டு சாதுவாக நெருப்பில் வாட்டி அப்படியே உண்ணும் பழக்கம்.

அப்படிப்பட்ட உணவை உட்கொண்ட ஒருவரிற்கு ஏற்பட்ட நிலையையே இங்கு காணப்போகிறீர்கள்.
Shota Fujiwara எனும் ஜப்பானிய நபர் குறிப்பிட்ட உணவு வகைகளை ( Sushi – ஜப்பானிய மொழியுல் உணவின் பெயர்) உண்வதில் அதிக ஆர்வமுள்ளவர். கடந்த சில காலமாக அவரின் தலையில் அடிக்கடி தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டதுடன் பதட்டமும் நிலவி வந்துள்ளது.

இறுதியாக அவர் சில செயல்களை முற்றாக மறக்க நேர்ந்தது. அப்போதுதான் முதல் முதலாக மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். அவரை ஸ்கான் பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அவரின் மூளையடங்களான தலைப்பகுதியில் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன!
அவசர சத்திர சிகிச்சை பிரிவில் நியமிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தீவிர முயற்சியின் பின் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்.

சரிவர சமைக்கப்படாத உணவை உண்டதாலேயே இப்படியான நிலை அவரிற்கு ஏற்பட்டுள்ளது.
மாமிச உணவுகளை பச்சையாக உண்பது எப்போதும் ஆபத்தானதே. ஒன்றில் அதிக சூட்டில் சமைத்தல் வேண்டும். அல்லது, -4 பாகை 0 பாகை அளவுகளிற்கு குளிர்மைப்படுத்திய உணவை உண்ணவேண்டும்.

www.puthiyaulakam.com  thanks

விடுதலைப் புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்கள்! (படங்கள் இணைப்பு)



தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்களை போர் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருப்பதை முல்லைத்தீவில் காணமுடிகின்றது. புதுக்குடியிருப்பு- முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னர் சிங்கள மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழரின் சொத்துக்களை மீண்டும் தமிழர்கள் காணக்கூடியதாகவுள்ளது.












இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை தினசரி பெருமளவான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.



www.puthiyaulakam.com thanks

மொஸ்கோவில் திடீரென நிறம் மாறிய வானம் : உலக அழிவின் அறிகுறியா.?



ரஷிய தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றின. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உலகத்தின் இறுதி நாள் வந்து விட்டது என்று சொல்லிசிலர் திகிலை ஏற்படுத்தினர்.வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ? என்று சிலர் சந்தேகப்பட்டனர்.இன்னும் சிலர்கடவுளுடைய அருளின் வெளிப்பாடு என்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானோர் இரசாயன பேரழிவு ஒன்றை இது கட்டியம் கூறுகின்றது என்றே நம்பினர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் என்று அரசு கோரியது. மொஸ்கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. இதனால் மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.


www.puthiyaulakam.com  thanks

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்



எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- இம்தியாஸ் ஸலபி
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். 
வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.
நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும்.
அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.
அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.
“கேபிள் டீவி மூலமும், Dish மூலமும் நூற்றுக்கணக்கான “செனல்கள்” காண்பிக்கப்படு வருவதால் ஒவ்வொரு செனல்களிலும் எந்தெந்த நேரங்களில் என்னவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை மனனமிட்டுவைத்திருக்கிறார்கள் மூலம் வௌ;வேறு விதமான நிகழ்;ச்சிகளை பார்த்து வணக்கத்திற்கான நேரத்தை தொலைத்து விடுகிறார்கள்.
பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய அதிகமான நேரங்களை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைககள் அரட்டையடிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கோட்டை விடுவதற்கும் கணவன் மனைவிக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். திசைமாறும் பயணங்களுக்கு இசைவான வழிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.
குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன. அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.
“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)
குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது.
குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும். நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு அவன் தூண்டி விடுவான். தீமைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் வரண்ட பூமியாக மாறிவிடும்.
“இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி)
அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார். ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது. துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.
ஒரு மனிதர் ஸூறதுல் கஹ்பை (இரவில்) ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இரு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியம் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்ன ஹாஸிப் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
குர்ஆன் ஓதும் வீட்டுக்கு அல்லாஹ்-விடமிருந்து அமைதி (ஸகீனத்) இறங்குகின்றபோது அந்த வீடு பாக்கியம் பொருந்திய வீடாக மாறிவிடுகிறது. குர்ஆன் ஓதுவதற்கு மாற்றமாக சினிமா, நாடகங்கள், ஆடல்-பாடல்கள் ஒலிக்கின்றபோது ஷைத்தானின் ஊசலாட்டங்களும் ஊடுருவல்களும் அந்த வீட்டில் நுழைய ஆரம்பிக்கின்றன.
“நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (20:14)
அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும். தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படிஅமைதிக்குரிய இடமாக அமையப் பெறும்?
உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த வீடுகளை (தொழுகை இல்லாத) மண்ணறைகளை (மையவாடி களை)ப் போன்று ஆக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம்)
மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். துஹஜ்ஜூத் மற்றும் சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா?
வீட்டுக்குள் நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும்
சாப்பிடும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்வதும்
தூங்கும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும் ஷைத்தான் வீட்டுக்குள் நுழைவதையும் தங்குவதையும் தடுக்கும் என நபியவர்கள் கூறிய நபிமொழிகள் பல காணப்படுகின்றன.
ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக வரறே;றுகின்ற நிகழ்வுகள் நடைப்பெறும் போது “முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும்.
ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆ அவ்ராதுகள் மற்றும் தொழு கைகளின் நேரங்களை நினைவில்கொள்ள முடியாத அவலங்களை பார்க்க முடிகிறது. பெண்களும் தொழுவதில்லை. பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை. பொறுப்க்குரிய கணவனும் ஏவுவதில்லை.
முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?
அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.(அல்குர்ஆன்:13:28)
என அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும். வாழ்வு நிம்மதியாக இருக்கும். வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும்.
உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும். ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போமாக.


www.islamkalvi.com thanks