♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 2 மே, 2012

காதலியை அடித்து கொன்ற காதலன்


காதலியை அடித்து கொன்ற காதலன்


May 2, 2012  05:48 pm

புதுவை தட்டாஞ்சாவடி மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சிந்துஜா (வயது 21). இவர் பாரதிதாசன் கல்லூரியில் B.Com  2-வது ஆண்டு படித்து வருகிறார். 

அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்கமல் (வயது 24) என்ஜினீயரிங் படித்தவர். இவர்கள் 2 பேருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜ்கமல் சிந்துஜாவை சந்திக்க விரும்புவதாக நேற்று மதியம் செல்போனில் பேசினார்.

அப்போது சிந்துஜா தன் தோழி வீட்டிற்கு படிக்க வந்துள்ளதாகவும் மாலை தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் என்றும் கூறினார். இதனால் சிந்துஜாவை சந்திக்க ராஜ்கமல் முன்னதாகவே மாலை 5 மணிக்கு வந்து தாவரவியல் பூங்கா அருகில் உள்ள உழவர் சந்தை அருகே காத்துக்கொண்டிருந்தார்.
 
சொன்னது போல் சிந்துஜாவும் வந்தார். 2 பேரும் பூங்காவிற்குள் சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது சிந்துஜா பணம் கொடுக்கும்படி ராஜ்கமலிடம் கேட்டார். ஏற்கனவே வாங்கிய பணத்திற்கெல்லாம் கணக்கே இல்லை. தவிர நீ வேறு யாருடனோ பழகுவதாக எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார் ராஜ்கமல். 

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கமல் சிந்துஜாவை அருகில் கிடந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து படுகாயம் அடைந்த சிந்துஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். 

சிந்துஜா ரத்த வெள்ளத்தில் பிணமாகி விட்டதை உணர்ந்த ராஜ்கமல் செய்வது அறியாது திகைத்து நின்றார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகில்தான் தாவரவியல் பூங்கா உள்ளது. இருப்பினும் என்ன செய்வது என்று திகைத்து நின்ற அவர் தட்டாஞ்சாவடிக்கு நடந்தே சென்று அவரது தந்தை ராஜ்கமலிடம் நடந்ததை கூறினார். அவர் உடனடியாக போலீசில் சரண் அடைந்து விடு என்று கூறினார். 

இதனால் ராஜ்கமல் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தார். அடிக்கடி சிந்துஜா தன்னிடம் பணம் கேட்டு நச்சரித்து வருவதாகவும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் பொலிஸில் புகார் கொடுப்பதாகவும் ராஜ்கமல் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 


thamilan.lk thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக