♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 11 ஜூலை, 2012

என் இளவரசன்..!


என் இளவரசன்..!




பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுத்து
உன்னை சும‌க்கும் வ‌ர‌த்தைக்கொடுத்து
பெருமிதம் கொள்ளச்செய்தாய்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு
ஐம்தாயிரம் கோடி
தவிப்புகளும் பேரின்பமும் கொள்ளச்செய்து
மகிழ்ச்சி வெள்ள‌த்தில் ஆழ்த்தினாய்!

நீ பேசும் ம‌ழ‌லையில் ம‌ய‌ங்கி
உன் ம‌டியினில் வீழ்த்திட்டாய்!

யோசித்து விய‌க்க‌ வைக்கும் கேள்விக‌ள் கேட்டு
உன் அறிவை மெச்சி போற்றிடுமளவிற்கு
யாவ‌ரையும் திணற‌வைப்பாய்!

எல்லா செல்வ‌மும் ஒருங்கே பெற்று
உன்த‌ன் ஈருல‌க‌ வாழ்வில்
குன்றின் மேலிட்ட‌ விள‌க்காய்
பிர‌காசிக்க‌
நீ பிற‌ந்த‌ இந்நாளில்
இறைவ‌னிட‌ம் இரு க‌ர‌மேந்தி
இறைஞ்சுகிறேன்
வாழிய‌ ப‌ல்லாண்டு..!!!

டிஸ்கி: என் அன்பு மகனுக்கு (அஃப்ஸர்) இன்று 16 செப்டம்பர், 5 வது பிறந்தநாள்..!அனைவரும் வந்து வாழ்த்தி வளமான வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டுகிறேன்..!

34 கருத்துசொல்ல:

Akbar 16 September, 2009 01:30  
மார்க்க அறிவும் உலக அறிவும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
நசரேயன் 16 September, 2009 02:25  
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பீர் | Peer 16 September, 2009 02:33  
வாழ்த்துக்கள் அஃப்ஸர்.
தமிழினி 16 September, 2009 05:17  
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
gayathri 16 September, 2009 07:31  
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாலா 16 September, 2009 08:32  
ஹே இவர்தான் மாப்ளையா
இப்போதன்யா கண்ணுலையே காட்டிருக்கீங்க
பிறந்தநாள் வாழ்த்துகளுங்கோ
ஜீவன் 16 September, 2009 09:25  
மன்னர் அபுவின் அன்பு மகன்! இளவரசன் அஃப்ஸருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
சந்தனமுல்லை 16 September, 2009 10:31  
இளவரசருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-) இறைவன் துணை என்றும் இருக்கட்டும்!!
அ.மு.செய்யது 16 September, 2009 10:51  
இளவரசருக்கு வாழ்த்துகளும் தூஆக்களும் !!

அப்ப‌டியே இள‌வ‌ர‌சியையும் கேட்ட‌தா சொல்லுங்க‌..!!
நாகா 16 September, 2009 11:05  
இளவரசருக்கும் இளவரசிக்கும் வாழ்த்துக்கள்
Karthik 16 September, 2009 11:17  
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)
S.A. நவாஸுதீன் 16 September, 2009 11:20  
அண்ணன் (ஒரு நாள் முன்னாடி பிறந்ததால்) அஃப்ஸருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இராகவன் நைஜிரியா 16 September, 2009 11:35  
இளவரசருக்கு என் இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.
ஷாகுல் 16 September, 2009 11:40  
உங்கள் இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)
ஷ‌ஃபிக்ஸ்/Suffix 16 September, 2009 11:45  
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஃப்சர்!! எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ எங்களது பிராத்தணைகள்.
தேவன் மாயம் 16 September, 2009 12:06  
உங்கள் அன்பு மகனுக்கு என் வாழ்த்துக்கள்!!1
தேவன் மாயம் 16 September, 2009 12:10  
வீட்டை ஆளும் உங்கள் மகன் நாளை நாட்டை ஆளட்டும்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக