இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
பன்னிரு திங்கள் நெறிகாண
ஒற்றை திங்கள் ரமலானில்
முப்பது நாட்கள்
நோன்பிருந்து
பசிகள் பலதுடன் போர்
புரிந்து
வல்லோன் வகுத்த கடமைகளை
வாஞ்சை மேவி நிறைவேற்ற
உணவும் நீரும் உடனிருந்தும்
பசியும் தாகமும் கை
கொண்டோம்
இச்சை இன்பம்
தவிர்த்திட்டோம்
நண்பர் குழாம் சூழ்ந்தாலும்
கேளிக்கை,விளையாட்டை
வெறுத்திட்டோம்
தீயோன் ஒருவன் பகை கொள்ள
நோன்பாளி நான்னென்று
விலகிட்டோம்
இத்துனை பாக்கியம்
நமக்களித்த
ஏகணை வணங்கி நன்றி சொல்லி
ஈதலை போற்றும் நன்நாளாம்
ஈகைத்திருநாள் கொண்டாடி
முப்பது நாளின் படிப்பினையே
முழுவதும் வாழ்வின்
நெறியாகி
அனைவர் வாழ்விலும் அருள் சேர
இருகரம் ஏந்தி துஆச்
செய்வோம்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக