♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வியாழன், 12 ஜூலை, 2012

வரும்......வருது.......வந்திருச்சு.........



வரும்......வருது.......வந்திருச்சு.........

எதப் பத்தி நான் சொல்றேனு யோசிக்கிறீங்களா??? இரண்டு விஷயங்கள்..........

முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!!

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

இல்லத்தில் பிரியாணி மணமும்........ கைகளில் மருதாணி மணமும்........ சிரிக்கும் கண்களும்...... இனிக்கும் புன்னகையும்........ சுட்டிகளின் கலக்கலும்........ சுந்தர மொழிகளுமாக.......

தூரத்து உறவுகள் ஊர் தேடி உவகை புரிய....... தொலைபேசி மணியொலியில் தொலைத்த இன்பங்கள் தேடி வர....... ஊரோடும் உறவோடும் உள்ளார்ந்த சிரிப்போடும் நாயனவன் நாட்டத்தினால் நல்ல செய்தி நாடி வர........ ஈத் முபாரக்! ஈத் முபாரக்!!

வறியவர்க்கும்.... உரியவர்க்கும்.... நண்பருக்கும்..... பகைவருக்கும்..... நல்லவர்க்கும்..... தீயவர்க்கும்..... சின்னவர்க்கும்.... பெரியவர்க்கும்..... மனங்கனிந்த ஈத் முபாரக்!!!

இரண்டாவது விஷயம்........


ரொம்ப நாளாக எதிர்பார்த்த வலைப்பூ பற்றிய என் புத்தகம் வெளி வந்து விட்டது! 96 பக்கங்கள், புத்தகத்தின் கடைசியில் பதிவு செய்த அனனத்து நண்பர்களின் வலைப்பூ முகவரிகளுடன் வெளியாகி உள்ளது!

பார்க்க பக்கம்: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_30.html

ஒரு சிறு வருத்தம் என்னவென்றால் இந்த புத்தகம் எழுதியதற்கும் வெளியானதற்கும் இடைப்பட்ட காலத்தில் ப்ளாகரில் நிறைய மாற்றங்கள்! அடுத்த எடிசனில் தான் அவற்றை அப்டேட் செய்ய வேண்டும். ஆயினும் ரூ.60 விலையுள்ள இப்புத்தகத்தின் தகவல்கள் புதியவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

புத்தகத்தின் அட்டைப் படம்:


முதன்முதலாக நான் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் இது. பிழைகள் இருந்தால்.......மின்னஞ்சல் அனுப்பினால்.......இன்ஷா அல்லாஹ்.......அடுத்த பதிப்பில் சரி செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

-சுமஜ்லா.

36 comments:

கிரி said...
வாழ்த்துக்கள் சுமஜ்லா.. ஈதுப் பெருநாள் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹுஸைனம்மா said...
மிகுந்த மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் சுஹைனா!! இரட்டைப் பெருநாள் ஒரே சமயத்தில் உங்க்ளுக்கு!!
அதிரை அபூபக்கர் said...
ஈத் முபாரக், உள்ளம்கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள், and புத்தகம் வெளியானதுக்கும் வாழ்த்துக்கள்
நட்புடன் ஜமால் said...
ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்

also for book
முத்துலெட்சுமி/muthuletchumi said...
புத்தகத்திற்கு வாழ்த்துகள் சுமஜ்லா..
ஈத் முபாரக் ...
Mrs.Menagasathia said...
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!! congrats suhaina!!
ப்ரியமுடன் வசந்த் said...
ஈகைத்திருநாள் வாழ்த்துகள் சகோ

புத்தக வெளியீட்டிற்க்கும் வாழ்த்துகள்!
Chitra said...
முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!!


.....ஈத் முபாரக்!

......புத்தக வெளியீட்டுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
பழமைபேசி said...
இரட்டிப்பு வாழ்த்துகள்!!!
Jaleela Kamal said...
வாழ்த்துக்கள் சுஹைனா.
ரொம்ப சந்தோஷம்.
இரட்டிப்பு வாழ்த்துகள் கண்டிப்பாக உங்கள் புத்தகம் எல்ல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் உங்க்ள் புகழ் மேன்மை அடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்:
Jaleela Kamal said...
வாழ்த்துக்கள் சுஹைனா.
ரொம்ப சந்தோஷம்.
இரட்டிப்பு வாழ்த்துகள் கண்டிப்பாக உங்கள் புத்தகம் எல்ல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் உங்க்ள் புகழ் மேன்மை அடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்:
மதுரை பாண்டி said...
வாழ்த்துக்கள் !!!!
NIZAMUDEEN said...
இல்லத்தில் உங்கள் அனைவருக்கும்
ஈத் முபாரக்!
நீண்ட நாள் ஆசையான புத்தக
வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!
கிரி said...
சுமஜ்லா நீங்க என்ன நினைத்து இந்த தலைப்பு வைத்தீர்களோ! சொல்லி வைத்த மாதிரி பரிந்துரை பகுதில உங்களுக்கு அடுத்ததா ஒரே விவகாரமான பதிவா வந்து இருக்கு ஹா ஹா ஹா..

தப்பா நினைத்துக்காதீங்க.. எனக்கு பரிந்துரை பகுதில இப்படி வரிசையா பார்த்தவுடன் சிரிப்பு தாங்கல.
SUMAZLA/சுமஜ்லா said...
வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி! பிறை தெரிந்து விட்டதால், நாளை தமிழகத்தில் பெருநாள் என்னும் செய்தி தற்போது தான் வந்தது!
asiya omar said...
மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் சுஹைனா.நிச்சயம் பயனுள்ள புத்தகம்.எங்க ஊரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்துபவர்களுக்கே வலைப்பூ என்றால் என்னன்னு தெரியலை.இனி வலைப்பூக்கள் கொடிகட்டி பறக்கும்.பயனுள்ள வெளீயீடு.
நீச்சல்காரன் said...
இரண்டிற்கும் வாழ்த்துக்கள்.
வால்பையன் said...
வாழ்த்துக்கள்!
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
வாழ்த்துக்கள் கமஜ்லா! ஈத முபாரக்!
மதுரை சரவணன் said...
வாழ்த்துக்கள். பண்டிகைக்கான பரிசு உங்கள் புத்தக வெளியீடு.
அன்புடன் மலிக்கா said...
இரட்டிப்பு வாழ்த்துக்கள் சுமஜ்லாக்கா.
குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

ஈத் முபாரக்
சிநேகிதன் அக்பர் said...
உங்கள் அனைவருக்கும் எனது ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

புத்தக வெளியீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அஸ்மா said...
சுஹைனா! நேரம் கிடைக்கும்போது இங்கே வந்து எட்டிப் பாருங்க.
அஸ்மா said...
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த‌ ஈத் முபாரக் சுஹைனா!

(கமெண்ட் கொடுத்தால் publish ஆகமாட்டேங்குது. என்ன ப்ராப்ளமோ தெரியல! இதோடு 3 வது முறை கொடுக்கிறேன். பதிவானால் சரிதான்! நேரம் கிடைக்கும்போது இங்கே வந்து பாருங்க.)
அஸ்மா said...
சுஹைனா! என்னுடையது புதிதாக ஆரம்பித்துள்ள வலைப்பூ இது.
இன்னும் நிறைய பகுதிகள் இனிதான் சேர்க்கப்படவேண்டும். அதில் உள்ளவை இஸ்லாம், சமையல், கைவினை,மருத்துவம், டிப்ஸ்.

அட்ரஸ்: http://payanikkumpaathai.blogspot.com/

நீங்கள் விரும்பினால் இதையும் இணைத்துவிடுங்களேன்.

(உங்களின் "வலைப்பூ பட்டியல் (புத்தகத்தில் இணைக்க)" போஸ்ட்டின் கீழ் இத பதிய போனால் "NEW COMMENTS HAVE BEEN DISABLED FOR THIS POST BY A BLOG ADMINISTRATOR" என்று மெஸ்ஸேஜ் வந்தது. அதான் இங்கே போஸ்ட் பண்ணிட்டேன். Sorry!)
மின்மினி said...
என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
ஜோதிஜி said...
புத்தகத்திற்கும் பெருநாளுக்கும் வாழ்த்துகள்.

தேவியர் இல்லம் திருப்பூர்
prabhadamu said...
சுமஜ்லா அக்கா உங்க பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்,. நேரம் கிடைக்கும் போது படிப்போன். இதுப்போல் செய்ததுக்கு மிக்க நன்றிக்கா. இதனால் அதிகமான தளம் அறிந்துக் கொள்ள முடிந்தது. மிக்க நன்றிக்கா..


இவை என்னுடைய தளம். ஆழ்கடல் களஞ்சியம்.

http://azhkadalkalangiyam.blogspot.com/


இதில் ஆரோகியம், இயற்க்கைவரம், மற்றும் பல நல்ல தகவல் அடங்கி இருக்கிறது,
prabhadamu said...
வாழ்த்துக்கள் சுமஜ்லா.. ஈதுப் பெருநாள் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அஸ்மா said...
சுஹைனா! என்னுடையது புதிதாக ஆரம்பித்துள்ள வலைப்பூ இது. இன்னும் நிறைய பகுதிகள் இனிதான் சேர்க்கப்படவேண்டும். இதில் உள்ளவை இஸ்லாம், சமையல், கைவினை, மருத்துவம், டிப்ஸ்.

அட்ரஸ்: http://payanikkumpaathai.blogspot.com/

இதையும் இணைத்துவிடுங்களேன்.
சீமான்கனி said...
அல்ஹம்துலில்லாஹ் புத்தகம் வந்ததிற்கு வாழ்த்துகள் அக்கா...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகள்....முன்பு போல் உங்களை இனி பார்க்கலாமா???
Vidhoosh said...
வாழ்த்துக்கள் சகோதரி.

ஈத் முபாரக். எல்லா வளமும் பெருக இறைவன் துணை நிற்கட்டும்.:)
SUFFIX said...
மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்!!
பாத்திமா ஜொஹ்ரா said...
ஈகைத்திருநாள் வாழ்த்துகள்
புத்தக வெளியீட்டிற்க்கும் வாழ்த்துகள்
Reddiyur said...
அன்புள்ள நண்பருக்கு!
அட்ரா சக்க என்ற வலைப்பூவுக்கு
//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !
http://rddr786.blogspot.com/h //
என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி உதவி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக