♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

வெள்ளி, 6 ஜூலை, 2012

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் (FATHER'S DAY WISHES)

முதலில் மறைந்தாலும் என்னுடனே வாழும் என் அன்பு தந்தைக்கும் மற்றும் உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையினை தந்தையர் தினமாக கொண்டாடுகிறோம்.அது என்ன அன்னையர் தினம்,தந்தையர் தினம் என தனி தனியாக கொண்டாடுவது என கேட்கலாம்.வேகமான உலகில் நாம் அனைவரும் பறந்தோடி வாழ்க்கைக்காக  போராடும் வேளையில் தினமும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை மற்றும் வேலையின் காரணமாக பெற்றோர் ஒரு இடத்திலும் பிள்ளைகள் ஒரு இடத்திலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்ற நாட்கள் நமக்கு மகிழ்ச்சியினை தருகிறது. எனவேதான் அதற்கென்று ஒருநாள் ஒதுக்கி அவர்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டு அவர்களின் வாழ்த்தினையும் பெற்று வருங்கால சந்ததிக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்.


காதலர் தினத்துக்காக எவ்வளவோ நேரம் ஒதுக்கி கொண்டாடும் நாம் ஏன்  அன்று நம்மை தோளில் தூக்கி வளர்த்த தந்தைக்காக  தந்தையர் தினத்தை கொண்டாட மறந்து விடுகிறோம்?




மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

என்ற குறலுக்கு ஏற்ப வாழ்வது மட்டுமின்றி நம்மை இந்த உலகில் நல்ல நிலைக்கு கொண்டுவர தன்னை வருத்திக்கொண்டு அதனை வெளிக்காட்டாமல் நம்மை வளர்த்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டும்.ஆனால் உலகில் உள்ள அனைத்து தந்தையருக்கும்  சேர்த்து ஒருநாள் கொண்டாடுவது தவறில்லை.


மீண்டும் அனைவருக்கும் தந்தையர் தின நல வாழ்த்துக்கள்.


தாயிட் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை



என்ற இந்த வாக்கினை  நம் உடலில் உயிர் உள்ளவரை மறவாமல் நம்முடைய பெற்றோரை இந்த நன்நாளில் நினைத்து கொண்டாடுவோம்.

நன்றியுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக