அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய அன்னையர் தின
நல்வாழ்த்துக்கள்..
இன்று
அன்னையர் தினம். அன்பை வாரி வழங்கும் மனிதத் தெய்வங்களை நன்றியுடன் நினைத்து
வாழ்த்து சொல்லும் தினம்.
உலகெங்கும் எத்தனையோ தினங்கள். காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர் தினம் என்று. ஆனால் அத்தனையிலும் புனிதமானதாக நாம் கருத முடியும் தினம் என்றால் அது அன்னையர் தினம்தான்.
அன்னை வழங்கும் அன்புக்கு அளவேது, விலையேது. வற்றாத ஜீவநதியாக அன்னையர் தரும் அந்த அளவில்லாத அன்புதான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார சக்தி.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் கடவுளுக்கும் மேலாக அன்னையை வைத்த நமது பாங்கிலிருந்தே அன்னை என்பவள் அத்தனை பேரையும் விட உயர்ந்தவள், உயரியவள் என்பது புரிகிறதல்லவா.
ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையை உலகெங்கும் அன்னையர் தினமாக கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவில்தான் இந்த அன்னையர் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. இன்று உலகின் பல நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக