தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
தியாகத் திருநாள் வந்த வரலாறு காண இங்கு வாருங்கள்
- குர்பானிமுறைகள்
- உங்களில்எவரேனும்குர்பானிகொடுக்கவிரும்பினால்அவர்துல்ஹஜ்பிறைகண்டதிலிருந்துகுர்பானிகொடுத்துமுடிக்கும்வரைதன்நகங்களையும்முடிகளையும்களையாதிருக்கவேண்டும்எனநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
- அறிவிப்பவர்உம்முஸலமா(ரழி)
- நூல்: முஸ்லிம்நஸவீ.
- ஒற்றைக்கண்குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப்பருவம்அடைந்ததுஆகியபிராணிகள்குர்பானிக்குஏற்றவையல்லஎன்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
- நூல்-அஹ்மத், நஸயீ.
- வசதியிருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும்இடத்திற்கு வர வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
- நூல்-இப்னு மாஜா.
- உண்ணுங்கள், உறவினர், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். சேமித்தும்வைத்துக்கொள்ளுங்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர்-அபுஸயீத்,
- நூல்-முஸ்லிம், திர்மிதீ.
- மற்ற நாட்களில் செய்யும் நல்லறத்தை விட (துல்ஹஜ்) பத்து நாட்களில்செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புக்குரியதாகும். அல்லாஹ்விடம் அதிக நன்மைபெற்றுத் தரக்கூடியதாகவும் இருக்கின்றன என நபி(ஸல்) கூறினார்கள்.
- அறிவிப்பவர்- இப்னு அப்பாஸ்(ரழி).
- இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவுஆகியவற்றில் ஈடுபடக் கூடாது.
- அல்குர்ஆன் 2:197.
- அரபா தினத்தன்று நோன்பு நோற்பது முந்தைய மட்டும் அடுத்த இரண்டு வருடபாவங்களையும் மன்னிக்கும் என்று நபி(ஸல்)கூறினார்.
- நூல்-முஸ்லிம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக