ஈகை திருநாள் வாழ்த்துக்கள்
பிஸ்மிஹி தஆலா
உண்ணாமல் பருகாமல் உடலிச்சை கொள்ளாமல்
உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்
எண்ணாமல்,
இடறாமல்,
ஏற்றவழி
விலகாமல்
இயல்பினிலே நன்மைகளை,
இலங்க வைத்த ரமளானே
நன்னாள்கள்
உன்னாள்கள், நானிலத்தின் பெருநாள்கள்
நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத்
திருநாள்கள்
என்னாளும் உன்
பயிற்ச்சி எமை நடத்திச் செல்வதற்கே
இறையவனை
வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே
பொய்யில்லை;
புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை
பண்பற்ற
செயலில்லை;பாவமில்லை; பேதமில்லை
மெய்யொன்றின்
தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள்
மெய்புலனில்
மனநலனில் மான்புடனே மாற்றங்கள்
உய்வுற்று
வாழுவதற்கே ஓரிறையின் ஓர் பரிசாய்
உலகுதித்தாய்;
உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே
வையத்துல்
வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர் வரத்தை
வானத்தின்
மீதிருந்து வழங்கி விட்டாய் நன்றிகளே
இரவினிலும்
இறைவணக்கம்; இதயத்துப்பூ மணக்கும்
இன்முகமே
கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம்
இறைவனுக்கே
தலை தாழும் என்கின்ற உள்ளுறுதி
யாவருமே
சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்
மறையதனை
ஓதியவர் மனதுக்குள் தாழ்திறக்கும்
மன்னுலகில்
வாழ்வதற்கு மகத்தான வழி பிறக்கும்
பிறையுதிக்கும் நன்னாளில் பரிசளிக்கும் இறையோனின்
பேரருளில்
நனைகின்ற பேராவல் பூத்திருக்கும்
வாய்மையுடன்
இறையச்சம் வளர்கின்ற பயிற்ச்சியினை
வழங்கிடுதே
ரமளானும் வல்லோனின் பெருங்கருனை
தாய்மையினும்
மிகைக்கின்ற தூயோனாம் அல்லாஹ்வின்
தன்னருளை
வேண்டுவமே தகுதிகளைப் பெறுவதற்கே
தூய்மையிலே
நனைகின்றோம் துல்லியமாய் நோன்பாலே
துடைத்திட்ட
பளிங்காகத் துலங்கிடுதே எம்மனங்கள்
போய் வருக
ரமளானே—புத்துணர்வை அளித்துவிட்டாய்
பல்லாண்டு
உனைக்கானும் பாக்கியத்தைக் கேட்போமே!
அனைவருக்கும்
உளங் கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
மற்றும் ஆறு
நோன்புகளை நோற்று நல் அமல்கள் செய்த நல் உள்ளங்களுக்கும் ஆறு நோன்பு பெருநாள் நல்
வாழ்த்துக் களையும்
மன
மகிழ்ச்சியுடன் தெறிவித்துக் கொள்கிறோம். வஸ்ஸலாம் இவண்
சித்தார்
கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்
ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினர்
என் கவிதையை எடுத்துப் பதிவிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன் பெயரையும் ஞாபகமாக மறக்காமல் போட்டிருக்கலாமே