ரமலான் சிறப்புகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித மிக்க இந்த அருமையான ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம். சிறப்பான மாதத்தினை நாம் அடைந்துவிட்டோம்..
இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா?
நபிகள் நாயகம்(ஸல்) கூறுகிறார்கள்
”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள்."
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் “லைலத்துல் கத்ர்’ இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்ய நபி (ஸல்) அவர்களும் ‘ஆமீன்’ என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதம் எவ்வளவ்வு மதிப்புகுரிய மாதம் என்று நாம் உணர வேண்டும் .
இந்த மாததில் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதிகம் இறைவனை நினைத்து நாம் செய்யத அறிந்தும் அறியாமல் செய்த பாவகளுக்கு பிழைப்பொறுக்க து ஆ செய்யவும்.
”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,” என்கிறான் அல்லாஹ்.
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)
எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம். அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாகவும் ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக