பறக்கும் ஆசை
உன்னில்,
கூண்டுக்குள் மாட்டிக்கொண்டாய்
கூட்டுக்குள் இரை
விழுவதில்லை,
கூண்டுக்குள் இது சாத்தியம் தான்!
விலையாக உன்
சுதந்திரமா!
கூட்டை உடைத்து வெளியே வா
சிறகை
விரித்து வான் அளப்போம்!
பறப்பதென்று ஆன பிறகு
எல்லை வெகு
தூரமில்லை
சிறகின் வலியும் பொருட்டுமில்லை
சிறகசைப்போம் வா வான்
அளப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக