வாங்க வாங்க விருந்து களிக்க வாங்க.
[நம்மவீட்டு ஹீரோ
மரூஃபும். என்தோழியின் மகள் ஜுல்பியாவும்.]
ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!
atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!
நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!
அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க.]
அப்படின்னு பிரியாணியும் நோன்பு கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.
அதில் பங்குகேட்ட ஜெய்லானி அண்ணாத்தேக்கு மற்றும் நாடோடியால் வந்த விருந்துதான் இது..
நீரோடையில் கண்களால் கவிதை நீராடி
களைத்தும் களைக்காமலும் -கண்
கலங்கியும் கலங்காமலும்-உதடு
சிரித்தும் சிரிக்காமலும்-மனம்
மகிழ்ந்தும் மகிழாமலும் -நெஞ்சம்
நிறைவடைந்து நிறைவடையாமலும்
எல்லாவற்றுக்கும் மேலாக
பொறுமையாய் படித்து
பொறுப்பாய் கருத்திட்டு - என்னை
பூரிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்.
என் அருமை தமிழ்மக்களே! உங்கள் அன்பிற்குறிய மலிக்கா
[நிறுத்து என்னது பாரதிராஜா ஸ்டைலில்தான் இத நாங்க படிக்கனுமா அப்படினெல்லாம் கேட்காம படிங்கப்பூ] அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது
தர்பூசணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ்.
அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..[ஆனா தர்பூசணி நான் கட்பண்ணியது எவ்வளவு கஷ்டமான வேலை அதை என்னிடம் விட்டதுதான் கொடுமை அதை செய்து முடிப்பதற்குள் அப்பப்பா ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]
இது முட்டை,
மட்டன்கீமா. லாப்பா.
லாப்பா. வாழைக்காய்
பச்சி. பெங்களூர் பக்கோடா.
வெள்ளரிமற்றும்
பழங்கள். சைடிஸ் வருவதற்குள் கிளிக்.
நோன்புக்கஞ்சி. இது
நான் செய்தது அதுவும் ஓட்ஸில் மட்டன்போட்டு.
என்னது
குடிக்கிறமாதரி இருந்ததாவா? கோப்பையும் சேர்த்து காணோம் கடைசியில் கச்சடா
சுருட்டும்போது சுருட்டியிருப்பாக! அவ்வளவு நல்லாவாஆஆஆ இருந்துச்சி. [முரளியண்ணா
கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]
நோன்புக்கஞ்சி.
சிக்கன்கட்லெட். உளுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு.
இது
உருளைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட்.
இது எங்க
அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான்
எதார்த்தமாக செய்த கிளிக்.
இது கீமா மற்றும்
ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ்.
இது ஒரு தனி டேஸ்ட்.
என்னதிது. ஏன்
யாருக்கும் தெரியாதோ இதுதாங்கோ சிக்கன். இல்லயில்ல கோழி. ஓ அதுதான் இதா நாங்களும்
என்னமோன்னு நெனச்சோம் அப்படின்னு பெருமூச்சி. காக்கா அதுவும் வெள்ளக்காக்கவை
இரவில் தின்னவங்க விடுவதுபோல் தெரியுது.
இத நாங்க கிரிளரில்
சுட்டு. கப்சா சோறு செய்து. அதுமேல உக்காத்தி வச்சிருக்கோம். கோழி சோறை
சாப்பிட்டுவிட்டு குண்டானதும்,
நாங்க
சாப்பிட.
சரி சரி நீ
கோழியைபார்க்காமல் கண்ணை மூடிக்கிட்டுதான் இருக்கேன்னு
அல்லாரும்
நம்பிட்டாங்க! கண்ணு.
போங்க மம்மிஇன்னும்
மீதியெல்லாம் எங்கே மம்மி.
அதுவா
வந்துகிட்டேயிருக்கு இதுகே கண்ணு போட்டுருவாங்கோ ன்னுதானே சைடில் நின்னு கிளிக்
செய்தேன் மரூஃப்கண்ணு.
ஓகே மம்மி
பாருங்க மம்மி
ஜெய்லானி அங்கிளும். முரளி அங்கிளும். ஸ்டீபன் அங்கிளும். கூடவே இப்ப வந்திருக்கிற
அய்யூஃப் அங்கிளும் குறு குறுன்னு என்னையே பார்க்கிறாங்க.
அச்சோ அப்படியா
வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு
சரியா!
ஓகே மம்மி
வெவ்வெவெவே..
இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள் [எங்கே மகிழ்வது வயிறு எரியுது அப்படின்னு எல்லாம் கோரசாக சொல்வதுபோல் கேட்குது] என்ன செய்ய என்னால் தற்போது இப்படிதான் விருந்து கொடுக்க முடியும். அனைவருக்கும் சேர்த்து கொடுக்க முடியாட்டியும் நிச்சயம் ஒருநாள் அனைவருக்கும் விருந்துகொடுக்க இறைவன் அருளட்டும். அருள் புரிவான்.
என்ன எல்லாரும் பெருநாள் துணியெல்லாம் எடுத்தாச்சா..
உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
டிஸ்கி// மூன்று மாதமுன்பே டிக்கெட் புக்பண்ணிவைத்திருக்கும் கலாம்காக்காவுக்கு ஸ்பெசல் விருந்து பெருநாளைக்கு கொடுத்துட வேண்டியதுதான். [டிக்கெட்காலாவதி யானாலும் நாங்க விடமாட்டோமுல்ல அப்படின்னு அய்யூஃபிடம், கலாம்காக்கா அபுதாபியிலேர்ந்து சொல்லுறது கேட்குறதுபோல தெரியுது?]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக