அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
தாய்மையைப் போற்றும் நாளான 'சர்வதேச அன்னையர் தினம்' உலகம் முழுவதும் இன்று
கொண்டாடப்படுகிறது. அன்னையரைப் போற்றி நாள் கொண்டாடுவோம் என்று இந்த உலகுக்கு
அறிவுறுத்தலை வழங்கியவர் அன்னா ஜார்விஸ். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா
மாநிலத்தைச் சேர்ந்த இவர், திருமணமானவரோ அல்லது...
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்
கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என உறுதி செய்யப்பட்டது. தனது அன்னையை
முன்னோடியாக வைத்து அன்னா ஜார்விஸ் மேற்கொண்ட கடின முயற்சியினால்தான் ஒவ்வொரு
ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிள்ளைகளைப்
பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னையருக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தியே
அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம்
கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையும் இவரையே போய்ச்சேரும்.
சமூக
நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், வருடத்தில் ஏதாவது ஒரு நாளில், எல்லோரும் தங்களது
தாயை, அவர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு
அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து கௌரவிக்க வேண்டும் என்று
விரும்பினார்.
அதற்காக
அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும்
அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு
பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல
மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம்
திகதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோவ் வில்சன், அன்னையர் தினத்தை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக