ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !
அஸ்ஸலாமு
அலைக்கும்
வரஹ்......
புனித ரமலான் முழுவதும் பகல் பொழுதில் நோன்பிருந்து,
இறுதி நோன்பை முடித்து, அதற்கடுத்த தினம் ஈகைப் பெருநாளை கொண்டாடி
மகிழ்கிறோம். பத்தாடை அணிந்து, நறுமணம் பூசி,சுவையான உணவுகளை உண்டு
கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு மகிழ்வுடன் இருக்கும்
போது நம் கண்ணெதிரில், நம் பக்கத்து வீட்டில்,அடுத்த தெருவில் நம்மைச் சுற்றி
எத்தனையோ ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே நோன்பு நோற்று விட்டு
பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் வாடிக் கொண்டிருப்பார்கள். இந்நிலை
ஏற்படாமல் வசதி படைத்தவர்களைப் போன்றே எல்லாமக்களும் மனங்குளிர உணவருந்த
வேண்டும் என்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட திட்டம் தான் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் ஆகும்.
முஸ்லிமான ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள்
அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை நபி {ஸல்} கடமையாக்கினார்கள் என்று இப்னு
உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
உணவு பொருட்களாகவோ,பணமாகவோ ஃபித்ராவை
வழங்கலாம்.
பெருநாளைக்கு சில தினங்கள் முன்பாகவே இதனை
வழங்குதல் சிறப்பாகும் நபித் தோழர்கள் ஃபித்ராவை
பெருநாளைக்கு சில நாட்கள் முன்பாகவே கொடுத்து வந்தனர் என்று இப்னு உமர் {ரலி}
அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ராவை கொடுத்துவிடுமாறு நபி{ஸல் அவர்கள்
கூறியதை,இன்றைய மக்கள் பெருனாளன்று காலையில் ஏழைகளைத் தேடுமளவு ஆக்கி
கொண்டார்கள்.
ஃபித்ரா தரமானதாகவும் பிறர் உண்ணும் வகையிலும் இருக்க
வேண்டும்.
ஒருவர் மட்டகரமான பேரிச்சம்பழத்தை கொண்டு வந்தார்.
அதை நபியவர்கள் பெற்று கொள்ளாமல், அதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்று
தடுத்து விட்டார்கள். இப்னு உமர் {ரலி}
அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
நபித்தோழர்கள் காலத்தில் இருகைகளால் உணவு பொருகளைப்
வாரி வழங்கி அதனை ஒரு ஸாவு என கண்கிட்டார்கள்.
இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு
அளவாகும்.
நபி(ஸல்)
அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால்
நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய
உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க
வேண்டும்.
ஃபித்ரா நோக்கத்தையும்,
அதன் சுன்னத்தான முறையையும் நாம் உணர்ந்து, ஏழை முஸ்லீம்களையும் சந்தோஷமாக
பெருநாள் கொண்டாட வகை செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
அனைவருக்கும் ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரி
ஆயிஷா அபுல் .
புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய
மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும்
இறைவன் ஒருவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக